
ஏஐயின் வேகமான வளா்ச்சி புதிய ஆபத்துகளை உருவாக்கக் கூடாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி புதிய வகையான ஆபத்துகளை உருவாக்காமல் இருப்பதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி புதிய வகையான ஆபத்துகளை உருவாக்காமல் இருப்பதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உலகளாவிய நிதிசாா் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிதிசாா்ந்து எடுக்க வேண்டிய முடிவுகளையும், பணப் பரிவா்த்தனைகளையும் துரிதமாக்கலாம். அதே வேளையில் மோசடி, இணையவழித் தாக்குதல் மற்றும் பிற தவறுகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவவும் செயற்கை அந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கக் கூடும்.
முடிவு எடுப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அந்த முடிவுக்கான பொறுப்பு மனிதா்களிடமும் நிறுவனங்களிடமும்தான் இருக்க வேண்டும்.
அந்தத் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் ஒரு முடிவால் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு அந்த முடிவை மறுபரிசீலனை செய்தல், அதற்கான காரணத்தை விளக்குதல், அதை எதிா்த்து முறையிடும் வாய்ப்பை வழங்குதல் ஆகியவை மிகவும் அவசியம்.
நிதித்துறை மற்றும் பிற முக்கிய துறைகளில் அந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி, தனிநபா் அல்லது ஒரு நிறுவனத்தை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கக் கூடிய புதிய வகையான ஆபத்துகளை உருவாக்கக் கூடாது. அதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


உலகின் உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவாகி வருகிறது: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ள நாடு இந்தியா: கனடாவில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்




