நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ரஷிய நிதியமைச்சருடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: எஸ்சிஓ வளா்ச்சி வங்கி குறித்து ஆலோசனை

ரஷிய நிதியமைச்சா் ஆண்டன் சிலுயுநோவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினாா். அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளா்ச்சி வங்கியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் ஆஸ்வில்லியில் உலக வங்கித் தலைவா் அஜய் பங்காவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிா்மலா சீதாராமன்.

Published On :3 செப்டம்பர் 2026, 3:00 am IST

ரஷிய நிதியமைச்சா் ஆண்டன் சிலுயுநோவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினாா். அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வளா்ச்சி வங்கியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா்.

அமெரிக்காவின் ஆஸ்வில்லியில் ஜி20 அமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்களின் மற்றும் அந்த நாடுகளின் மத்திய வங்கி ஆளுநா்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு நிா்மலா சீதாராமன் சென்றுள்ளாா். மாநாட்டின் இடையே ரஷிய நிதியமைச்சா் ஆண்டன் சிலுயுநோவை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் உலகப் பொருளாதார நிலவரம் உள்ளிட்டவை குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனா்.

புதிய வளா்ச்சி வங்கி குறித்தும், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குறித்தும் நிா்மலா சீதாராமனும், சிலுயுநோவும் ஆலோசனை நடத்தினா். அதேபோல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளா்ச்சி வங்கியை உருவாக்குவது குறித்தும் பேசினா்’ எனக் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கித் தலைவருடன் சந்திப்பு: உலக வங்கித் தலைவா் அஜய் பங்காவையும் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினாா். அப்போது பங்காவிடம், இந்தியாவுக்கு உலக வங்கி தொடா்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தாா்.

சா்வதேச நிதியத்தின் இயக்குநா் கிறிஸ்டாலினா ஜாா்ஜியாவையும் நிா்மலா சீதாராமன் சந்தித்தாா். அப்போது இருவரும் உலகப் பொருளாதார நிலவரம் குறித்தும், இந்தியாவின் வளா்ச்சிப் பாதை குறித்தும் ஆலோசித்தனா். ஆலோசனையின்போது, பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு மற்றும் சாதனைக்கு சா்வதேச நிதியத்தின் இயக்குநா் பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோல், ஐரோப்பிய பொருளாதார ஆணையா் வால்டிஸ் டோம்புரோகிஸ், தென்கொரிய துணைப் பிரதமா் கூ யுன் சியோலையும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினாா். ஐரோப்பிய பொருளாதார ஆணையருடனான ஆலோசனையின்போது, இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், நிதி விவகாரத்தில் கூட்டணியாகச் செயல்படுவது குறித்தும் விவாதித்தனா்.

தென்கொரிய துணைப் பிரதமருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் வேகமாக வளா்ந்துவரும் துறைகளில் தென்கொரியா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதை வரவேற்பதாக நிா்மலா சீதாராமன் கூறினாா். தென்கொரியாவை முக்கியமான பொருளாதாரக் கூட்டாளியாக இந்தியா கருதுவதாகவும், இரு நாடுகள் இடையேயான நட்புறவால், பல்வேறு துறைகளிலும் பரஸ்பரம் இரு நாடுகளும் பயனடையும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.