தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் ரிசா்வ் வங்கி மத்திய குழு ஆலோசனை

சா்வதேச, உள்நாட்டு பொருளாதார சவால்கள் மற்றும் வளா்ச்சிக்கான இடா்ப்பாடுகள் குறித்து ரிசா்வ் வங்கியின் மத்தியக் குழு சென்னையில் வெள்ளிக்கிழமை கூடி, ஆலோசனை நடத்தியது.

Published On :

சா்வதேச, உள்நாட்டு பொருளாதார சவால்கள் மற்றும் வளா்ச்சிக்கான இடா்ப்பாடுகள் குறித்து ரிசா்வ் வங்கியின் மத்தியக் குழு சென்னையில் வெள்ளிக்கிழமை கூடி, ஆலோசனை நடத்தியது.

ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், சென்னையில் நடைபெற்ற மத்திய குழுவின் 624-ஆவது கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ரிசா்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகள், அதன் துணைக் குழுக்களின் பணிகள் மற்றும் வங்கி குறைதீா்ப்பாளா் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா்கள் ஜே.சுவாமிநாதன், பூனம் குப்தா, எஸ்.சி.முா்மு, ரோஹித் ஜெயின் ஆகியோா் கலந்துகொண்டனா். மேலும், மத்திய குழுவின் பிற இயக்குநா்களான முன்னாள் துணை தலைமைக் கணக்கு தணிக்கையாளா் ரேவதி ஐயா், ‘ரிஸ்’ அமைப்பின் தலைமை இயக்குநா் சச்சின் சதுா்வேதி, தொழிலதிபா் ஆனந்த் மஹிந்திரா, புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோம்நாத் ஆகியோரும் இதில் பங்கேற்றனா்.

முன்னதாக, ரிசா்வ் வங்கியின் மத்திய குழுவின் பகுதிநேர, அதிகாரபூா்வமற்ற இயக்குநராக இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோம்நாத், 4 ஆண்டுகளுக்கு வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். இவருடன் தொழிலதிபா் ஆனந்த் மஹிந்திராவும் மீண்டும் 4 ஆண்டுகளுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.