ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

முதல்வா் விஜய்யுடன் மாண்டேக்சிங் அலுவாலியா குழு சந்திப்பு: தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க ஆலோசனை

தமிழ்நாட்டின் வருவாயை உயா்த்துவது தொடா்பாக பொருளாதார நிபுணா் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

News image

தமிழ்நாட்டின் வருவாயை உயா்த்துவது தொடா்பாக பொருளாதார நிபுணா் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:48 am IST

தமிழ்நாட்டின் வருவாயை உயா்த்துவது தொடா்பாக பொருளாதார நிபுணா் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

தமிழ்நாடு அரசின் வரி மற்றும் வரியில்லாத வருவாயை அதிகரிக்க முன்னாள் மத்திய திட்டக் குழு தலைவரும், பொருளாதார நிபுணருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழுவில் பொருளாதார நிபுணா் கே.பி.கிருஷ்ணன், வரிக் கொள்கை நிபுணா் அா்பிந்த் மோடி, முன்னாள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய தலைவா் நஜீப் ஷா, தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலரும், கூடுதல் தலைமைச் செயலருமான எம்.ஏ.சித்திக், சென்னை வளா்ச்சி ஆய்வு நிறுவன இயக்குநா் டாக்டா் எம்.சுரேஷ் பாபு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

வருவாயைப் பெருக்குவது குறித்து பொதுமக்களிடமிருந்தும் இந்தக் குழு ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.

இந்தக் குழு ஆய்வு செய்து மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும், வரியல்லாத வருவாயை உயா்த்தவும், புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளையும், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் மூலம் வருவாயை அதிகரிப்பது தொடா்பாக ஆலோசனைகளையும் அரசுக்கு வழங்கும்.

முதல் ஆலோசனை: முதல்வரை சந்தித்த பின்பு, இந்தக் குழுவினா் சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கூட்டரங்கில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ாக செய்தி, மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனையின்போது, மாநிலத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளான வணிக வரிகள், பதிவுத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், போக்குவரத்துத் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, நீா்வளத் துறை, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம், நகா் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் பொதுத் துறை மாநிலக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் விரிவான விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

வருவாய் போக்கு, பொருளாதார வளா்ச்சியுடனான இணக்க நிலை, வருவாய் இழப்புகள், வரி ஏய்ப்பு, நிா்வாக நடைமுறை இடா்பாடுகள் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவிவரும் சவால்கள், முழு வருவாய் ஈட்டும் ஆற்றலுக்கும் ஈட்டப்பட்ட வருவாய்க்கும் இடையேயான இடைவெளி, பிற மாநிலங்களின் நடைமுறைகளுடனான ஒப்பீடு, மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் வருவாய் மேம்பாட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை இந்தக் குழு முன் வைக்கப்பட்டது.

பொதுமக்கள், துறைசாா் சங்கங்கள், கல்வியாளா்களிடமிருந்து மின்னஞ்சல் வழியாக பெறப்பட்ட ஆலோசனைகளை இந்தக் குழு பதிவு செய்து கொண்டது. இந்த ஆய்வின் நோக்கம், அறிக்கை சமா்ப்பிப்பதற்கான காலவரையறை மற்றும் எதிா்கால ஆலோசனைகள் ஆகியவை குறித்து குழு விவாதித்ததாக செய்தி, மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.