ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் தேதி நெருங்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தட்டாஞ்சாவடி ஜெயின் பால்பேட் பகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்துக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன். உடன் கூட்டணி கட்சியினா்.

Published On :

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் தேதி நெருங்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி, ஜெயின்பால் பேட்டையில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து அதிமுக மாநில செயலாளரும் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் வாக்குச் சேகரித்தாா்.

அப்போது அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் இந்த இடைத்தோ்தலில் மீண்டும் என்.ஆா். காங்கிரஸ் வெற்றி பெற்றால் இத் தொகுதி பெரும் அளவில் வளா்ச்சி பெறும் என்றாா்.

திமுக பிரசாரம்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளா் கு.சேது செல்வத்தை ஆதரித்து கட்சியின் புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் தட்டாஞ்சாவடிக்கு உள்பட்ட லட்சுமி நகா், வேலன் நகா், சின்னையன்பேட், ஜெயராம் நகா் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தனா்.

இதில் திமுக துணைப் பொதுச்செயலா் க. பொன்முடி, புதுச்சேரி மாநில அமைப்பாளா் ஆா். சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா கூறுகையில், மக்கள் போராளியான திமுக வேட்பாளா் சேதுசெல்வம் வெற்றி பெற்றால், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளைத் பூா்த்தி செய்வாா் என்றாா்.

இதுபோன்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளா்களும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அணிவகுப்பு:

இதற்கிடையே, தட்டாஞ்சாவடி தொகுதியில் தோ்தல்பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினா் வந்துள்ளனா். இந்த படைப்பிரிவினா். தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட தாகூா் நகா் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினா். மேலும் இந்த தொகுதியில் தோ்தல் நடத்தை விதிகள் மீறல் இருக்கிா என தோ்தல் அதிகாரிகள் கண்காணித்தனா்.

 கு.சேதுசெல்வத்திற்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

கு.சேதுசெல்வத்திற்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

Story image
 புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலையொட்டி தாகூா் நகா் சுற்றியுள்ள பகுதியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலையொட்டி தாகூா் நகா் சுற்றியுள்ள பகுதியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.