அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செஞ்சி பேரூராட்சித் தலைவருக்கு குடும்ப அட்டை இணைப்புத் தாள் வழங்க மறுப்பு

பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவருக்கு 2013-ஆம் ஆண்டிற்கான குடும்ப அட்டையில் இணைக்க கூடுதல் இணைப்புத் தாள் வழங்க விற்பனையாளர் சனிக்கிழமை மறுப்பு தெரிவித்து விட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:19 pm

தினமணி

பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவருக்கு 2013-ஆம் ஆண்டிற்கான குடும்ப அட்டையில் இணைக்க கூடுதல் இணைப்புத் தாள் வழங்க விற்பனையாளர் சனிக்கிழமை மறுப்பு தெரிவித்து விட்டார்.

செஞ்சி கிருஷ்ணாபுரம் தேசூர்பாட்டை சாலையில் உள்ள மக்கள் அங்காடி கடை எண் 1-ல் செஞ்சி பேரூராட்சி தலைவர் செஞ்சி மஸ்தான் குடும்ப அட்டை உள்ளது. டிசம்பர் மாதம் வரை சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குடும்ப அட்டையில் கூடுதல் இணைப்புத் தாள் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் செஞ்சி மஸ்தான் தனது வீட்டின் எதிரே இருக்கும் ரேஷன் கடையில் இணைப்புத் தாள் கேட்டுள்ளார்.

அதற்கு ரேஷன் கடை விற்பனையாளர் அமுதா, உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. உங்களது குடும்ப அட்டை எண் பட்டியலில் இல்லை எனக் கூறிவிட்டார். இது குறித்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் மனோகரனிடம் புகார் செய்தார்.

உடனே அவர் ரேஷன் கடையில் உள்ள பட்டியலில் ஆய்வு செய்தார். மேலும் பட்டியலில் விடுபட்டுள்ளதை விரைவில் சரி செய்வதாகக் கூறினார். இது குறித்து செஞ்சி மஸ்தான் கூறியது:

25 ஆண்டு காலம் தொடர்ந்து செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளேன். மக்கள் பிரதிநிதியான என்னுடைய குடும்ப அட்டையையே பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் எனது தம்பி தி.மு.க. நகர செயலர் காஜாநஜீர் உள்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் அட்டையை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.

இது போன்று 100-க்கும் மேற்பட்ட அட்டைகளையும் நீக்கியுள்ளதாக பொது மக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை பெறும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகம் முன் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.