கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தில் ரூ.78 லட்சத்துக்கு ஜவுளி
விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.97 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்கானிக் சில்க் புடவைகள், ஜெயகார்த்திகா சேலைகள், 100 சதவீத பட்டு மற்றும் 100 சதவீத பருத்தி சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மென்பட்டு, கோரா காட்டன் சேலைகள், ஜீன் டாப்ஸ், மீரட் போர்வை, பருத்தி சேலைகள் உள்பட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தீபாவளி- 2015 சிறப்பு விற்பனைக்கு தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி செப்டம்பர் 15 முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை வழங்கப்படும்.
தற்போது பரிசுக் கூப்பன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இதர சுப காரியங்களுக்கு வாடிக்கையாளர்கள் உறவினர்களுக்கு ரூ.500, ரூ.1000, ரூ.2000 பரிசு கூப்பன்களை வாங்கி வழங்கலாம். மேலும், மின்வணிக முறையை கோ-ஆப்டெக்ஸ் அமல்படுத்தியுள்ளது. இதில் துணி வகைகளை கணினிமூலம் வலைதளத்தில் பார்வையிட்டு தேர்வு செய்து, அதற்குரிய தொகையை செலுத்தி இல்லத்திலேயே பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தங்க மழை என்ற புதிய திட்டத்தில், ஒவ்வொரு மண்டலத்திலும் ரூ.2000-க்கும் மேல் கைத்தறி துணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 100 கிராம் தங்கம் வரை பரிசளிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் முதல் பரிசாக தலா 4 கிராம் தங்கம் 10 நபர்களுக்கும், தலா 2 கிராம் தங்கம் 30 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் கடலூர் மண்டல துணிநூல் மற்றும் கைத்தறி உதவி இயக்குநர் கி.கிரிதரன், நிர்வாகக் குழு உறுப்பினர் த.ராமலிங்கம், மண்டல மேலாளர் ரா.சூரியநாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

