குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

அனுமதியின்றி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்: போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை

விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பேருந்துகள்  பறிமுதல் செய்யப்பட்டன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பேருந்துகள்  பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தலைமையில், ஆய்வாளர்கள் மோகன், வெங்கட்ராமன் ஆகியோர் திடீர் வாகன தணிக்கை செய்தனர்.

புதிய பேருந்து நிலையம் அருகே இவர்கள் ஆய்வு செய்தபோது, விழுப்புரத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்கு மருத்துவ முகாமிற்கு பொது மக்களை அழைத்துச் சென்ற மினி பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

புதுவை பதிவெண் கொண்ட அந்த வாகனம், தமிழக பகுதியில் இயக்குவதற்கான அனுமதி பெறாமல் இருந்ததால் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, முகாமிற்கு வந்த பொது மக்களை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஆய்வு செய்தபோது, திருப்பூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற வெளி மாநில சொகுசுப் பேருந்து, தமிழக அனுமதி பெறாமல் இயங்கியது தெரிய வந்ததால் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது, அனுமதியின்றி இயங்கிய 2 தனியார் பள்ளிப் பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, தலா ரூ.20 ஆயிரம் அளவில் உரிய வரி மற்றும் அபராதம் செலுத்த வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், அந்த வாகனங்கள் அனைத்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.