பறிமுதல் வாகனங்கள் ரூ.31 லட்சத்துக்கு ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 152 வாகனங்கள் 31 லட்சத்து 1 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.


விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 152 வாகனங்கள் 31 லட்சத்து 1 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.
கடந்த சில வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மது கடத்தல் வாகனங்கள் விழுப்புரம், காக்குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை காலை ஏலம் விடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொது ஏலத்தில், 134 இருசக்கர வாகனங்கள், 7 மூன்று சக்கர வாகனங்கள், 44 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில், 116 இருசக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள், 31 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் ரூ.31,01,100-க்கு ஏலம்போனது. இந்த நிகழ்ச்சியில், மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...