தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது லாரி மோதல்: பெண் சாவு 

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக் மீது லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:26 am

தினமணி

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக் மீது லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
 கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முத்துலட்சுமி (37). இவர்கள் இருவரும் கச்சிராயப்பாளையத்தில் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கனி வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
 கச்சிராயப்பாளையம் - அம்மாபேட்டை சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது, கரடிசித்தூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
 இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சேகர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார் .
 விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கச்சிராயப்பாளையம் போலீஸார், முத்துலட்சுமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.