இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில் பெண் சாவு?

திருக்கோவிலூர் அருகே போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில், பெண் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:13 am

தினமணி

திருக்கோவிலூர் அருகே போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில், பெண் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 திருக்கோவிலூரை அடுத்த வடியாங்குப்பம் கிராமத்துக்கு போலீஸ் உடையில் சிலர் புதன்கிழமை வந்துள்ளனர். முன்னதாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது கடைக்குச் சென்றுள்ளனர்.
 அப்போது, கடையில் சோமசுந்தரத்தின் மனைவி அமுதா(40) மட்டுமே கடையில் இருந்துள்ளார். அவரிடம், பணம் பறிக்கும் நோக்கத்தில் தாறுமாறாக விசாரித்தனராம்.
 இதனால் பதட்டமடைந்த அமுதா, திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, திருக்கோவிலூர் - சந்தப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.