ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:15 am

தினமணி

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சட்டம் சார்ந்த நன்னடத்தைஅலுவலர் பணியிடம் தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.21,000 ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.
 இப்பணிக்கு இளநிலை சட்டம் கொண்ட கல்வி தகுதியுடன், குழந்தைகள் நலன், சமூகநலம், தொழிலாளர் நலன் சார்ந்த சட்ட ஆலோசனை வழங்கியதற்குரிய குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விதி விலக்காக ஓய்வு பெற்ற அரசாங்க பணியாளராக மற்றும் கொள்கை வரைவு, களப்பணி செயல்பாடுகளில் அனுபவம் உள்ளவராக இருப்பின் 62 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
 மேற்கண்ட பதவிக்கான, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன், பத்திரிகை செய்தி வெளியிட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.156, சாரதாம்பாள் தெரு, நித்தியானந்தா நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04146-258099 என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
 விண்ணப்பங்களை, மேற்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.