தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விழுப்புரம் அருகே மணல் கடத்தல்: 6 பேர் கைது; 3 லாரிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே புதன்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 6 பேரை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:22 am

தினமணி

விழுப்புரம் அருகே புதன்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 6 பேரை கைது செய்தனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள சென்னை - கும்பகோணம் சாலையில் லாரியில் மணல் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க விக்கிரவாண்டி காவல் ஆயவாளர் இளஞ்செழின் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, பாப்பனப்பட்டு அழக்குப் பாலம் அருகே மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிச் செல்லப்படுவது தெரியவந்தது.
 இதனிடையே, அந்த லாரிகளில் வந்த மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், 3 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 மேலும், இது தொடர்பாக ஆணாங்கூரைச் சேர்ந்த ராமு மகன் ரமேஷ் (34), நரையூரைச் சேர்ந்த கரிகாலன் மகன் பிரசாந்த் (20), மணியரசு மகன் மணிபாலன் (30), கோவிந்தராஜ் மகன் ஆனந்த் (32), ஞானவேல் மகன் அருண் (23), அமாவாசை மகன் வெங்கடேசன் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
 தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளரான பனங்குப்பத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் ஆறுமுகம் (35) என்பவரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.