விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 9 கோடியே 73 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 195 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக் காலங்களின் போது வழக்கத்தைவிட கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.
கடந்த செவ்வாய்க்கிழமை (தீபாவளிக்கு முன்தினம்) ரூ.4 கோடியே 17 லட்சத்து 36 ஆயித்து 80-க்கு மது விற்பனை நடைபெற்றது. புதன்கிழமை ( தீபாவளி) ரூ.5 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரத்து 90-க்கு விற்பனையானது.
இதில் பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவை விற்பனையாதன் மூலம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 13ஆயிரத்து 460 வசூலானது. பீர் வகைகள் மூலம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 06ஆயிரத்து 630க்கு வர்த்தகம் நடைபெற்றது.
செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் மொத்தம் ரூ.9 கோடியே 73 லட்சத்து 55 ஆயிரத்து 170க்கு விற்பனை நடைபெற்றது.
கடந்த ஆண்டைவிட குறைவு: கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஒரே நாளில் 238 டாஸ்மாக் கடைகள் மூலம் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகள் ரூ.5 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் மற்றும் பீர் வகைகள் ரூ.1 கோடியே 35 லட்சத்து 74 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்த மதிப்பு சுமார் ரூ.7 கோடியே 20 லட்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.