ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

செஞ்சியில் 23 ஆண்டுகளாக தொடரும் குடிநீர் பிரச்னை!

செஞ்சி நகரில் கடந்த 23 ஆண்டுகளாக தொடரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:51 am

செஞ்சி நகரில் கடந்த 23 ஆண்டுகளாக தொடரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
செஞ்சி நகரில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்னையாக தொடர்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடந்த1991-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருக்கோவிலூர் தென் பெண்ணையாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து செஞ்சி-அனந்தபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பூமியில் புதைக்கப்பட்ட தரமற்ற குழாய்கள் அழுத்தம் தாளாமல் அடிக்கடி வெடித்து, தண்ணீர் அதிகளவில் வெளியேறி வீணாகியது. இந்தத் திட்டத்தில் பெறப்படும் குடிநீர் அனந்தபுரத்துக்கே போதாதால் செஞ்சி நகரின் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.
இதையடுத்து, அதிமுக ஆட்சியின்போது எம்எல்ஏவாக இருந்த வெ.ஏழுமலை, செஞ்சி அருகே காட்டுப் பகுதியான மங்களாவரத்தில் இருந்து திறந்தவெளி கிணறு மூலம் குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார். ஆனால்,  அதில் அதிகளவு சுண்ணாம்பு கலந்து இருப்பதாகக் கூறி மக்கள் அந்த நீரை பயன்படுத்தவில்லை.
கடந்த 2007-ஆம் ஆண்டில், திமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் திருக்கோவிலூர் ஆற்றில் இருந்து செஞ்சி நகருக்கு மட்டும் தனியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்து இதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டும் விழா  நடைபெற்றது. இந்தத் திட்டம் ஓராண்டுக்குள் முடிந்தாலும், மீண்டும் அழுத்தம் தாங்காமல் குழாய்கள் அடிக்கடி வெடித்து குடிநீர் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.  மேலும், 37 கி.மீ. பயணிக்கும் இந்த  நீர் ஆங்காங்கே பழுதடைந்து காணப்படும் கேட் வால்வுகள் மூலம் வெளியேறி வீணாகி வருகிறது. தற்போது செஞ்சிக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று 30 நாள்கள் ஆகிறது.  பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செஞ்சி நகர மக்கள் கூறுகையில், செஞ்சி நகருக்கான குடிநீர் வழங்கும் திட்டத்தைப் பொறுத்தவரை குடிநீர் வடிகால் வாரியம் வசம் இருந்தபோதே கட்டமைப்புகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. திட்டம் முடிந்ததும் குடிநீர் விநியோகிக்கும் பணி செஞ்சி பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைத்து இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குடிநீர் வரும் பாதையை சீரமைக்காமலும், குழாய்கள் பழுது நீக்கப்படாமலும்  உள்ளது. இந்தத் திட்டத்தை திட்டமிட்டு தரமான முறையில் செவ்வனே செயல்படுத்தினால் தினமும் தண்ணீர் கிடைக்கும். 
வரும் கோடை காலமான மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, செஞ்சி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.