ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பொன்முடிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை மே 3-க்கு ஒத்திவைப்பு

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற

Updated On :9 ஏப்ரல் 2018, 11:37 pm

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி  உள்பட 8 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது க.பொன்முடி, லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தன்,  கோபிநாத் உள்பட 5 பேர் ஆஜராகினர். கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிமன்ற (எண்-1) நீதிபதி மோனிகா விசாரணையை வருகிற மே 
3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இதேபோல, பொன்முடி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கும், இதே நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது க.பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஹேமலதா சாட்சி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.