உளுந்தூர்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், பாண்டூரில் 5000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் நேரிலும், கடிதம் வாயிலாகவும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

