போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

விழுப்புரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: வாழைகள் சேதம்

விழுப்புரம் பகுதியில் பலத்த காற்றுடன் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் பல ஏக்கர் வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:49 am IST

விழுப்புரம் பகுதியில் பலத்த காற்றுடன் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் பல ஏக்கர் வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், வளவனூர், காணை, திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி சுற்றுப் பகுதிகளில் இந்த மழை அரை மணி நேரம் வரை நீடித்தது.
 பலத்த காற்றுடன் பெய்த இந்த மழைக்கு, விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையத்தில் கார்த்திகேயன் உள்ளிட்ட 5 விவசாயிகளின் 10 ஏக்கர் அளவிலான வாழைகள் சாய்ந்தன. இதே போல, சுற்றுப்பகுதிகளான அத்தியூர் திருவாதி, சித்தாத்தூர், நன்னாடு, வளவனூர், கோலியனூர், பஞ்சமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டிருந்த 10 ஏக்கர் அளவிலான வாழைகள் சாய்ந்தன.
 குலை தள்ளிய நிலையில் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
 அதே வேளையில், திடீர் மழையால் வெப்பம் சற்று தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.