விழுப்புரம் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இல்லாமல் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2019-ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பு தினத்தை பொதுமக்கள் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் கொண்டாட வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 14 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாகன ஓட்டிகள் அதிவேகமாகவும், மது போதையிலும் வாகனங்களை இயக்கக் கூடாது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் (இ.சி.ஆர்.) அமைந்துள்ள நட்சத்திர உணவகங்கள், தங்கும் விடுதிகளில் உரிமம் இல்லாமல் மது விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று கோட்டகுப்பம் உள்கோட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடலில் குளிக்கவும், படகில் செல்லவும், நீச்சல் குளங்களுக்கு அருகே மேடைகள் அமைக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் எவரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட காவல் துறை மூலம் தக்க பாதுகாப்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் எஸ்.பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


