தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வல்லம் வட்டாரக் கிளைப் பேரவைக் கூட்டம் அந்த ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவையில் வருகிற ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கூட்டத்தையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும், வட்டாரக் கிளைப் பேரவைக் கூட்டம், தொடர்ந்து, மாவட்டப் பேரவைக் கூட்டங்களை பிப்ரவரி மாதத்தில் நடத்த தருமபுரியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு அறிவுறுத்தலின்படி, இந்தக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வட்டாரத் தலைவர் அர.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
வட்டாரக் கிளையின் புதிய நிர்வாகிகளாக அர.சௌந்தரராஜன் தலைவராகவும், கு.கிருஷ்ணமூர்த்தி செயலராகவும், க.பாலமுருகன் பொருளாளராகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினராக ஜெ.பெருமாள், துணைத் தலைவர்களாக இளவரசி, அபிராமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் கு. சரவணன், திருவேங்கிடம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.