தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு 

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 3 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:02 am

தினமணி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 3 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.
 விழுப்புரம் அருகே கஞ்சனூரை அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவரது மூன்றரை வயது மகன் விமல். புதன்கிழமை காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த விமலை காணவில்லை.
 உறவினர்கள் விசாரித்தபோது, அப்பகுதி சிறுவர்களுடன் விமல் அங்குள்ள ஏரிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஏரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது, நீரில் மூழ்கிக் கிடந்த விமலை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கஞ்சனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.