சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஸ்ரீசாரதா மகாவித்யாலய மகளிர் கல்லூரியில் சிறப்பு தொழில் பயிற்சி பட்டறை

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மை மற்றும் வணிகவியல் துறையை

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:50 am

தினமணி

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மை மற்றும் வணிகவியல் துறையை சார்ந்த கௌடில்யா மற்றும் சஞ்சலான் மன்றம் சார்பில் சிறப்பு தொழில் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
 கல்லூரி முதல்வர் வி.பழனியம்மாள் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவி எஸ்.லட்சுமிபிரியா வரவேற்றார்.
 காஞ்சிபுரம் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் டி.ராம்குமார் கலந்துகொண்டு "பினான்சியல் அவர்னஸ் புரோகிராம் பார் யங் இன்வெஸ்டர்' எனும் தலைப்பில் மாணவிகளிடையே உரையாற்றினார் . இதில் செபி பற்றிய தகவல்கள், பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டும் முறைமை குறித்து எடுத்துரைத்தார். வணிக மேலாண்மை துறைத்தலைவர் பி.கௌசல்யா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியை கே.மீனாட்சி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.