தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பழைய வெடிகளை கொளுத்திய சிறுவர்கள் மூவர் காயம்

திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 4:01 am

தினமணி

திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.
 திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கலில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பயன்படுத்தப்பட்ட வெடிகளில் சில, வெடிக்காதவையாக கிடந்தன.
 அந்த வெடிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராஜீவ்காந்தி மகன் பிரமோத் (9),முருகன் மகன் காந்திச்செல்வன்(8), ரமேஷ் மகன் ராகுல்(8) ஆகியோர் சனிக்கிழமை இரவு தேடி எடுத்து, அதிலிருந்த வெடி மருந்தை மொத்தமாகக் கொட்டி கொளுத்தினர். அப்போது, திடீரென வெளிப்பட்ட அதிகப்படியான தீயில் பிரமோத், காந்திச்செல்வன், ராகுல் ஆகியோர் சிக்கி காயமடைந்தனர். உடனே, அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.