விழுப்புரத்தில் சம்ஸ்கிருத மொழி அறிஞர் வே.இந்திரஜித்தின் "திருக்குறள் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு நூல்' ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிராக்ஸின் படிப்பகத்தில் உலக இலக்கியப் பேரவையின் இரண்டாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக இலக்கியப் பேரவைத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். எழுத்தாளர் இதயவேந்தன், மருதம் அமைப்பாளர் ரவிகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சம்ஸ்கிருத மொழி அறிஞர், திருவாரூர் வே.இந்திரஜித் கலந்து கொண்டு தமிழ்-சம்ஸ்கிருதம் பக்தி இலக்கியங்களுக்கிடையேயான ஒப்பியல் ஆய்வுரை வழங்கினார்.
தொடர்ந்து, அவர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்த திருக்குறள் நூலை விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர்(பொ) ரவிசங்கர் வெளியிட, தமிழாசிரியர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் விக்கிரமன், அனவரதன், இளந்திணயன், ஜெஸ்ரீல், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராக்ஸிஸ் படிப்பக நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

தொகுதி மறுவரையறையால் மக்களை சிதறடித்துவிடக் கூடாது: சீமான்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

