விழுப்புரம் மாவட்ட மது விலக்கு காவல் பிரிவில் 205 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 மது விலக்கு காவல் நிலையங்களில் பணிபுரியும், ஓராண்டைக் கடந்த காவலர்களை பணியிடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை கடந்த மே மாதம் தொடங்கியது. அதற்காக, மது விலக்குப் பிரிவுக்கு செல்வதற்கு தகுதியான, தகுதியில்லாத போலீஸாருக்கான 197 பேர்களைக் கொண்ட முதல் மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், தகுதியான 50-க்கும் மேற்பட்டோர் மது விலக்கு பிரிவுக்குச் செல்ல விருப்பமில்லை என கடிதம் அளித்ததால், பணியிடமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, 94 பேர் அடங்கிய 2-ஆவது மூப்புப் பட்டியல் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இவ்விரு பட்டியலிலும் விருப்பம் தெரிவித்த போலீஸாரைக் கொண்டு, பணியிடமாற்ற பட்டியலை இறுதி செய்யும் கூட்டம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில், எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், மது விலக்கு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, திண்டிவனம் டி.எஸ்.பி சங்கர், திண்டிவனம் டி.எஸ்பி. திருமால், செஞ்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. இளங்கோவன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மது விலக்கு பிரிவில் இருந்து வெளியேயும், மது விலக்கு பிரிவுக்கு புதிதாகவும் என மொத்தம் 205 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி, மது விலக்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 102 தலைமைக் காவலர்கள், ஒரு முதல் நிலைக் காவலர் என 103 பேர் பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல, வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 102 போலீஸார் மது விலக்கு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் மூலமாக நியமிக்கப்பட்டனர்.
முதல்நிலைக் காவலர்களுக்கு அதிக வாய்ப்பு: மூப்புப் பட்டியலின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் தலைமைக் காவலர்களே அதிக அளவில், மது விலக்கு பிரிவுக்கு இதுவரை நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்த முறை பணி மூப்பு இருந்தும் ஏராளமானோர் மது விலக்கு பிரிவுக்கு செல்ல விருப்பமில்லை என்று மனு அளித்ததால், எப்போதும் இல்லாத வகையில் 60-க்கும் மேற்பட்ட முதல்நிலைக் காவலர்கள் மது விலக்கு பிரிவுக்கு செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
விருப்ப இடமாற்றம்: தங்களின் தேவைகளுக்காக பணியிடமாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த காவல் நிலையங்களில் பணிபுரிபவர்கள், புகார்களில் சிக்கி ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டவர்கள் என 29 பேர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

