மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சுயபரிசோதனைக்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம்

எதிர்க்கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவே மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:34 am IST

எதிர்க்கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவே மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
திருக்கோவிலூர் நான்குமுனைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சிக் கொடியேற்றி அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது பலம் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம். இது மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் அல்ல.
எதிர்க்கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்பதற்காக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு தமிழக அரசு ஏன் ஆதரவளிக்க வேண்டும். தமிழக அரசுக்கு என்ன தேவையோ, அதை அவர்கள் மத்திய அரசிடம் இருந்து 
கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதால் தமிழக அரசுக்கு எந்தப் பயனுமில்லை. இது ஒரு தேசிய பிரச்னையும் அல்ல.
காவிரி பிரச்னைக்கு திமுக போராட்டம் நடத்தினால் மக்களுக்கு புரியும். ஆளுநர் ஆய்வு நடத்துவதை எதிர்த்து திமுக போராடினால் மக்களுக்கு ஒன்றும் புரியாது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை யாரோ தவறாக வழி நடத்துவதாகத் தெரிகிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எண்ணிக்கை அளவில் மட்டும் நாங்கள் வெற்றிபெறவில்லை. மக்கள் மத்தியில் உள்ள எண்ணத்தில் இருந்தும் வெற்றிபெற்றுள்ளோம்.
சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை இயற்கையாகவும், சுமுகமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதைப்போல, சாலை போடுவதற்காக 90 சதவீத மக்கள் தாமாகவே முன்வந்து நிலங்களை தருகிறார்கள்.
பொதுமக்களின் விளைநிலத்துக்கு பாதிப்பில்லாமல் சந்தை விலையை விட, ஒன்றரை மடங்கு விலையை தமிழக அரசு உயர்த்தித் தருகிறது.
தூத்துக்குடி சம்பவம் போன்ற கலவரமும், துப்பாக்கிச் சூடும் நடைபெற விடாமல் தமிழக அரசு பார்த்துக் கொண்டது பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் அரங்கேறும் 
அதிரடி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் தனக்கு அடிபணியாத நபர்களை, அடிபணிய வைப்பதற்காக இதுபோன்ற சோதனைகள் நடைபெறும். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்றார் இல.கணேசன்.
நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ வி.ஏ.டி.கலிவரதன், கோட்ட இணை பொறுப்பாளர் அருள், மாவட்டத் தலைவர் தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட பொதுச் செயலர்கள் கண்ணன், தர்மராஜ், மாவட்டச் செயலர்கள் காமராஜ், கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்பப் பிரிவு கோட்டப் பொறுப்பாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.
நிர்வாகிகள் வசந்தன், அரிகிருஷ்ணன், கணேசன், ராமன், சதிஷ்குமார், பாலாஜி, சுரேஷ், திருமால், சம்பத், அன்பு, மணிகண்டன், மதன், கமல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாற்றுக் கட்சியினர் சுமார் 25 பேர் பாஜகவில் 
இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.