பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

விக்கிரவாண்டி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:35 am IST

விக்கிரவாண்டி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்(48). விவசாயி. இவர், சனிக்கிழமை விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவரது சவுக்கு தோப்புக்கு வந்தார். அப்போது, டிராக்டரில் அமர்ந்து பயணித்துள்ளார். டிராக்டரை பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணி (45) என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்தார். பின்னால் வந்த டிரெய்லர் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே வெங்கேடசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.