மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருக்கோவிலூரில் கபிலர் விழா நிறைவு

திருக்கோவிலூரில் தொடர்ந்து 3 நாள்கள் விமரிசையாக நடைபெற்ற கபிலர் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

Updated On :23 ஜூலை 2018, 9:32 am IST

திருக்கோவிலூரில் தொடர்ந்து 3 நாள்கள் விமரிசையாக நடைபெற்ற கபிலர் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் 43-ஆவது ஆண்டு கபிலர் விழா, திருக்கோவிலூர் ஸ்ரீசுப்ரமண்ய மஹாலில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு, 9 மணிக்கு டி.வி.சண்முகசுந்தரம் குழுவினரின் மங்கல இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு வாசுகி கண்ணப்பன் திருமுறை பாடினார். 10.30 மணிக்கு பண்பாட்டுக் கழகச் செயலர் வெ.கோ.தெய்வீகன் வரவேற்றார்.
பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி தலைமையில் புலவர், புரவலர் புகழ் அரங்கம் நடைபெற்றது.
இதில், "கபிலரும் பாரியும்' என்ற தலைப்பில் தி.இராசகோபாலன், "கபிலரும் காரியும்' என்ற தலைப்பில் சாமி தியாகராசன், "கபிலரும் பரணரும்' என்ற தலைப்பில் புரிசை நடராசன், "கபிலரும் ஒளவையும்' என்ற தலைப்பில் விஜயலட்சுமி இராமசாமி ஆகியோர் பேசினர்.
மாலை 5.30 மணிக்கு பண்பாட்டுக் கழக செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன் தலைமையில் இடைகழி அரங்கம் நடைபெற்றது. இதில், "ஆழ்வார்கள் சங்கமம்' என்னும் பொருள் பற்றி பேராசிரியர் கிருங்கை சேதுபதி பேசினார்.
இதைத் தொடர்ந்து, பொற்றாமரை கலை இலக்கியக் கழக நிறுவனர் தலைவர் இல.கணேசன் தலைமையில் சொல்லாடரங்கம் நடைபெற்றது.
இதில், "பாரதியின் கனவு மெய்ப்பட்டு இருக்கிறது' என்ற அணியில் இராசகோபாலன், சங்கீதா பழனி, இரா.ருக்குமணியும், "மெய்ப்பட இல்லை' என்ற அணியில் புரிசை நடராசன், திருமாறன், அனுக்கிரகா ஆதிபகவனும், "மெய்ப்பட வாய்ப்பு இருக்கிறது' என்ற அணியில் சாமி தியாகராசன், கோ.சரவணன். சங்கமித்திரையும் பேசினர்.
வாசுகி கண்ணப்பன் நிகழ்ச்சி இணைப்புரை வழங்கினார். பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் கா.பி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழகத் தலைவர் டி.எஸ்.தியாகராஜன், பொதுச் செயலர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன், செயலர்கள் தேவ.ஆசைத்தம்பி, கோ.தனபால், துணைத் தலைவர் தே.முருகன், தணிக்கையாளர் வே.அப்பர்சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
கபிலர் விழா அரங்கம் அமைக்க வேண்டும்: திருக்கோவிலூரில் கபிலர் விழா அரங்கம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பேராசிரியர் கிருங்கை சேதுபதி வலியுறுத்தினார்.
கபிலர் விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
கவியரசு கண்ணதாசனுக்கு தமிழக அரசு மணி மண்டபம் எழுப்பி இருக்கிறது. சங்கக் காலப் புலவர்களில் தலைசிறந்தவர்களுக்கும் இதுபோல மணி மண்டபங்கள் அமைக்க வேண்டும். இன்றைக்கும் பழங்கால நினைவுச் சின்னமாக திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தில் கபிலர் குன்று ஒன்று மட்டுமேதான் உள்ளது.
கடந்த 43 ஆண்டுகளாக கபிலர் விழா திருக்கோவிலூர் நகரின் பல்வேறு இடங்களில் மாறிமாறி நடத்தப்பட்டு வந்துள்ளது. இதில், பல்வேறு செயல் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்து தொய்வின்றி இந்த விழா நடத்தப்பட பண்பாட்டுக் கழகத்துக்கு அரங்கம் அவசியமாகும்.
எனவே, திருக்கோவிலூரில் கபிலர் விழா அரங்கம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் கிருங்கை சேதுபதி.
பின்னர், பேசிய பொற்றாமரை கலை இலக்கியக் கழக நிறுவனர் தலைவர் இல.கணேசன், கபிலர் விழா அரங்கம் அமைக்க தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரிடம் தெரிவித்து ஆவன செய்வதாக 
தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.