ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடையின்றி தொழில் கடன் வழங்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தொழில் கடன்களை தடையின்றி வழங்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:02 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தொழில் கடன்களை தடையின்றி வழங்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், கட்சி நிர்வாகிகளுடன் திங்கள்கிழமை வாராந்திர குறைதீர் கூட்டத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துக் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அரசு வழங்கும் கடன் திட்டங்களை, பெரும்பாலான வங்கிகள் தர மறுத்து வருகின்றன. 
இதனால், சிறு தொழில் தொடங்க முயற்சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதுதொடர்பாக வங்கிகளில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தாட்கோ மூலமாகவே நேரடியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து, தொழில் கடன் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வறட்சியில் தவித்து வருவதால், நடப்பு பருவத்துக்கான பயிர்களுக்கு பாசனத்துக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், ஆட்சியரிடம் பரிந்துரைந்து 
நடவடிக்கை எடுப்பதாக 
தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.