தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து இரு சிறுவர்கள் மாயம்

விழுப்புரத்தில் அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திலிருந்து இரு சிறுவர்கள் மாயமாகினர். அவர்களில் ஒரு சிறுவன் சென்னையில் புதன்கிழமை மீட்கப்பட்டார்.

Updated On :7 ஜூன் 2018, 8:54 am IST

விழுப்புரத்தில் அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திலிருந்து இரு சிறுவர்கள் மாயமாகினர். அவர்களில் ஒரு சிறுவன் சென்னையில் புதன்கிழமை மீட்கப்பட்டார்.
 கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் ரயில் நிலைய நடைமேடைகளில் ஆதரவற்ற நிலையில் திரிந்து கொண்டிருந்த இரு சிறுவர்களை, ரயில்வே பகுதியில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மீட்டு விசாரித்தனர். அதில், அவர்கள் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், பெற்றோர்கள் கவனிப்பின்றி, வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்ததும் தெரிய வந்தது.
 இதையடுத்து, அவர்கள் இருவரையும் தொண்டு நிறுவனத்தினர், விழுப்புரம் சாலாமேடில் உள்ளஅரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில், திடீரென இரு சிறுவர்களும், திங்கள்கிழமை பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸார் மாயமான சிறுவர்களை தேடிவந்தனர்.
 அந்த சிறுவர்களில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சென்னையில் புதன்கிழமை மீட்கப்பட்டார். சென்னையில் கட்டுமான கூலி வேலை செய்து வரும் அவரது தாயிடம் செல்ல முற்பட்டதாக அந்த சிறுவன் தெரிவித்தார். இதையடுத்து, மாயமான மற்றொரு சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.