செஞ்சி அருகே திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
செஞ்சி அருகே துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை விழுப்புரத்துக்கு வந்து, ஆட்சியரகம், எஸ்.பி. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துடுப்பாக்கம் கிராமப் பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது. இந்த கடையால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே அந்த மதுக்கடை அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதையடுத்து, பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, அந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.
ஆனால், மூடப்பட்ட மதுக் கடை பள்ளிக்கு அருகில் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. ஆகவே அந்த மதுக் கடையை திறக்கக் கூடாது. கடையை திறந்தால், எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தீர்மானித்துள்ளோம். ஆகவே, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, மதுக் கடை திறப்பதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.