செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இ.எஸ்.கல்விக் குழுமம் சார்பில் கல்விக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

விழுப்புரம் மாவட்ட தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி நலனுக்காக இ.எஸ்.கல்விக் குழுமம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 11:01 pm

விழுப்புரம் மாவட்ட தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி நலனுக்காக இ.எஸ்.கல்விக் குழுமம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.
விழுப்புரத்துக்கு வருகை தந்த மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திங்கள்கிழமை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, மத்திய அமைச்சரை சந்தித்த இ.எஸ்.கல்விக் குழுமத்தின் தலைவர் இ.சாமிக்கண்ணு, ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.10 லட்சம் நிதியை அமைச்சரிடம் வழங்கினார்.
இத்தொகையைப் பெற்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இந்தத் தொகையை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில், வைப்பு நிதியில் வைத்து வழங்குமாறு, உடன் வந்த பாஜகவினரிடம் அறிவுறுத்தி வழங்கினார். நிகழ்ச்சியில், இ.எஸ்.கல்விக் குழும நிர்வாகிகள் செல்வமணி, செந்தில்குமார், சரவணன் மற்றும் பாஜக எஸ்சி அணி மாநில செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.