விழுப்புரத்தில் மாமேதை காரல்மார்க்ஸின் 200-ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரல்மார்க்ஸ் 200-ஆவது பிறந்த நாள் விழாக் குழு சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் "மார்க்சிய பார்வையில் தமிழிலக்கியம்-பண்பாடு' என்ற தலைப்பில் ஆய்வுரைகள் தமிழக மார்க்சிய பேரறிஞர் எஸ்.தோத்தாத்ரி, செவ்வியல் தமிழ் அறிஞர் பெ.மாதையன், மார்க்சிய ஆய்வாளர், எழுத்தாளர் ரா.முருகவேல், இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர் அ.ரபீக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ் இலக்கியங்களில் மார்க்சிய பார்வையில் பார்க்கும்போது, தமிழ் இலக்கியங்களில் சமூக மாற்றங்களுக்காக நடைபெற்றுள்ள வர்க்கப் போராட்டங்களை அறிய முடிகிறது. சமூகத்தைப் பற்றிய விஞ்ஞானப் புரிதலும் கிடைக்கிறது. மார்க்சியம் குறித்து, அதன் அறிஞர்கள் வானமாமலை, சிவதம்பி, கைலாசபதி, சோ.கேசவன் ஆய்வுகளை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மேலும் பல அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன், கவிஞர்
மு.ராமமூர்த்தி, விழி ப.இதயவேந்தன், எழுத்தாளர் மதுசூதன், ஆய்வாளர் சி.சிவா, கவிஞர் மோகனசுந்தரம், இலக்கிய ஆய்வாளர்கள் கார்க்கி, பிரபாகர், சதீஷ்குமார், அறிவழகன், மாணவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தவெக

சிக்ஸர்கள் விளாச நான் பயிற்சி மேற்கொள்வதில்லை: பிரியான்ஷ் ஆர்யா

ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

