மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இலக்கிய அறிமுகக் கூடல்

விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 2:55 am

விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் சி.மா.பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். செயலாளர் மு.அனந்தகுமார் வரவேற்றார். 
தமிழ்ச் சங்க நெறியாளர் தெ.வே.சஞ்சீவிராயன் தொடக்க உரையாற்றினார். மயிலம் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மா.சற்குணம், தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் பாவலர் தமிழநம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் த.வேலவனின் "உயிரோவியம்' கவிதை நூலை கள்ளக்குறிச்சியில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ரா.தமிழரசி அறிமுகம் செய்து பேசினார்.  பேராசிரியர்கள் த.பழமலய், ரகமதுல்லாகான், பீம.தனஞ்செயன், எம்.ஏ.சின்னத்தம்பி, ச.மகாவிஷ்ணு, புலவர்கள் அன்பழகன், செ.மணி, அரிபன்னீர்செல்வம், த.பாலு, கவிஞர் சீ.விக்ரமன், மு.பாலகிருட்டிணன், ஆவின்.தி.கி.பத்மநாபன், கோ.மகேந்திரன், வெ.மணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்ச் சங்க பொருளாளர் சீனு.சந்திரசேகர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.