தீபாவளி பண்டிகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தீபாவளி பண்டிகை வரை விடுமுறை எடுக்கக் கூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சாலைத் தடுப்புகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உள்படுத்தி வருகின்றனர்.
தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று வாகனங்களை ஆய்வு செய்தார். இதேபோன்று, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை என மாவட்டம் முழுவதும் டி.எஸ்.பிகள், காவல் ஆய்வாளர்கள் உள்பட 1500 போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...
தமிழகம் எதிர்கொள்ளும்!

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


