தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கார் கவிழ்ந்து விபத்து: டி.எஸ்.பி, காவலர் காயம்

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தலை தடுக்க விரைந்து சென்ற டிஎஸ்பியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டி.எஸ்.பி, காவலர் ஆகியோர் காயமடைந்தனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:23 am

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தலை தடுக்க விரைந்து சென்ற டிஎஸ்பியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டி.எஸ்.பி, காவலர் ஆகியோர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியான வீமராஜ், மணல் கடத்தல் தடுப்புப் படை பொறுப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக விழுப்புரத்திலிருந்து காவல்துறை வாகனத்தில் புறப்பட்டார்.
 காரை முதல் நிலைக் காவலர் சௌந்தரராஜன் ஓட்டினார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், அரசூரை கடந்து செல்லும்போது, தனியார் பொறியியல் எதிரே மாடு ஒன்று திடீரென குறுக்கே வர, ஓட்டுநர் பிரேக் பிடித்து காரை நிறுத்த முயன்றார். 
  ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் சாலையின் வலது புறமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், டி.எஸ்.பி. வீமராஜ், ஓட்டுநர் சௌந்தரராஜன் ஆகியோர் காயமடைந்தனர்.
 திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று டி.எஸ்.பி., காவலரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வீரமாஜுக்கு பின் தலையில் காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டதாகவும், காவலருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.