விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் மூலவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் வெள்ளித் தேரில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலைப் பாதையை வலம் வந்தார்.
விழாவில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் செய்திருந்தார்.
மயிலம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

