பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. 
கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிறகு அவரது வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார். விழாவில் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் டி.எஸ்.வீரமணி, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் கே.செல்வம், ஜெ.மோகன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் பா.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
செஞ்சியில்: அனந்தபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சார்பில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலு வரவேற்றார்.
முன்னாள் ரோட்டரித் தலைவர் அ.ஜேசுஜூலியஸ்ராஜா அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி மதிவாணன், ரமேஷ், நாராயணன், பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், சம்பத், முன்னாள் கவுன்சிலர் கார்த்தி
கேயன், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில்: இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். தாளாளர் ஜி.எஸ்.குமார், செயலாளர் என்.கோவிந்தராஜூ, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜி.ஜெயசீலன், நிர்வாக அலுவலர் கு.மோகனசுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாணவ ஆசிரியர் எஸ்.கார்த்திக் வரவேற்றார். 
மாணவ ஆசிரியை வி.காவியா, எம்.ஆயிஷா பேராசிரியர்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துகளை தெரிவித்தனர். துணை முதல்வர் அ.சண்முகம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.