அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

சிங்கவரம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:52 am IST

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் நிகழ்வது போன்று சிங்கவரம் கிராமத்திலும் அரங்கநாத பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனையுடன் அரங்கநாதப் பெருமான் சூரியபிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், காலை 10 மணிக்கு பெரிய திருவடி என்கிற கருடசேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு திருமஞ்சன விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு  ஸ்ரீஅரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.