பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் மனு : ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:42 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மனுக்களை அளித்தனர். இந்த முகாம்களை  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி மக்களவை பொதுத் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணியின் கீழ் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
முகாமில், வாக்காளப் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,  பெயர், வயது, பாலினம், உறவுமுறை முதலிய பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8யு உள்ளிட்ட படிவங்கள் வழங்கப்பட்டன. வாக்காளர்கள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான படிவத்தைப்  பெற்று, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிர்ணய அலுவலர், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த  முகாமில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
வானூர் ஊராட்சி ஒன்றியம் கிளியனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தைலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோலியனூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கோலியனூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளையும் ஆட்சியர்ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வட்டாட்சியர்கள் ஜோதிவேல், சையத் மெஹமூத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.