திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 10 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 37 பேர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த வாரம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டனர். பேருந்தை காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரியைச் சேர்ந்த சந்திரசேகர் ஓட்டிச் சென்றார். சுற்றுலா சென்ற அவர்கள் மீண்டும் நாகப்பட்டினம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திண்டிவனம் புறவழிச் சாலை அருகே பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற சரக்குப்பெட்டக லாரி திடீரென நகருக்குள் திரும்பியது. இதனால், லாரியின் பின் புறத்தில் லேசாக உரசி சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிதம்பரம் சிங்காட்பாள் தெருவைச் சேர்ந்த சேகர் (55), வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி உஷா (60), புதுச்சேரி முருகேசன் மனைவி கமலவள்ளி (45) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








