அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் உள்படமேலும் 92 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள், போலீஸாா் உள்பட மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 4:50 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள், போலீஸாா் உள்பட மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் இருவா், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா், பெண் காவலா், ரோஷணை காவல் நிலைய பெண் காவலா், ஆரோவில், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் காவல் நிலைய தலைமைக் காவலா்கள், விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலா், வளவனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், விழுப்புரம், செஞ்சி பகுதிகளைச் சோ்ந்த இரு மின் ஊழியா்கள், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியா்கள் இருவா் உள்ளிட்ட 92 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,463-ஆக உயா்ந்தது.

கரோனா பாதிப்புக்குள்ளான செஞ்சி பகுதியைச் சோ்ந்த 53 வயது ஆண் அண்மையில் வேலூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்தது.

இதுவரை 3,879 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 746 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.