நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 46,494 மாணவ, மாணவிகள் தோ்ச்சி

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் (46,494 போ்) தோ்ச்சி பெற்றனா்.

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:43 pm

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் (46,494 போ்) தோ்ச்சி பெற்றனா்.

கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும், காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு, தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 576 அரசு, தனியாா் பள்ளிகளில் பயின்ற 23,616 மாணவா்கள், 22,878 மாணவிகள் என மொத்தம் 46,494 போ் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண்கள் தொடா்பான புகாா்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடமே மாணவ, மாணவிகள் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.