சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரூ.10-க்கு பிரியாணி: விழுப்புரத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு

விழுப்புரத்தில் ரூ. 10 பிரியாணி வாங்க புதிய பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

விழுப்புரத்தில் ரூ. 10 பிரியாணி வாங்க புதிய பேருந்து நிலையம் எதிரே குவிந்த கூட்டம்.

Updated On :14 டிசம்பர் 2020, 8:40 am

விழுப்புரத்தில் ரூ. 10 பிரியாணி வாங்க புதிய பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகரில் புதிதாக ரூ.10-க்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த சில நாள்களாக இணையதளங்கள் மூலமாகவும் பரவியது. இதை கண்ட பொதுமக்கள் திங்கள்கிழமை அந்த பிரியாணி கடை எங்க உள்ளது என்று தேடினர். அப்போது தான் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் தள்ளு வண்டி கடை தான் அந்த பிரியாணி கடை என்பதை அறிந்தனர். திங்கள்கிழமை காலை முதலே பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

அங்கு வைத்திருந்த பதாகையில் 'ரூபாய் 10 நாணயம்' கொடுத்தால் பிரியாணி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு வந்தனர். இதனால் அங்கு  கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றது.ஆனால், பல மணி நேரம் காத்திருந்தும் பிரியாணியும் வரவில்லை, பிரியாணி பாத்திரம் வரவில்லை.இதனால் அங்கு காத்திருந்தவர்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் பிரியாணி செய்யும் இடத்துக்கு தேடிச் சென்றார்.

அங்கு சென்றவர்களுக்கும் பிரியாணி வழங்கப்படவில்லை. கடையில் தான் பிரியாணி கொடுக்கப்படும் என்று தெரிவித்தால், ஏமாற்றத்துடன் மீண்டும் பொதுமக்கள் கடைக்கு திரும்பினர். இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் எதிரே பிரியாணி வாங்க குவிந்திருந்த கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பிறகு வேறு ஒரு இடத்தில் பிரியாணி கடையை திறந்தனர்.

Story image

அங்கும் ஏராளமானோர் குவிந்ததால் திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த காவல்துறையினர் அங்கும் சென்று அந்த கூட்டத்தை விரட்டி அடித்தனர். இதனால், ஏமாற்றமடைந்த பிரியாணி ரசிகர்கள் மீண்டும் பிரியாணி செய்யும் இடத்திற்கு திரண்டு வந்தனர். வேறுவழியில்லாமல் பிரியாணி கடைக்காரர்கள் அந்த இடத்திலேயே பிரியாணி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பின்னர் அங்கேயே பிரியாணியை விற்பனை செய்தனர். இதனை நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வழங்கினர். பல மணி நேரத்துக்கு பிறகு ஒருவழியாக 10 ரூபாய் பிரியாணியை வாங்கி ருசித்தனர். இருப்பினும் கூடிய கூட்டத்தில் ஒரு பகுதினருக்கு மட்டுமே பிரியாணி கிடைத்தது. அதற்கு பிரியாணி நீர்த்துப்போனதாக அறிவித்தனர். இதனால் பிரியாணி வாங்க வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுபோன்ற குறைந்த விலையில் வழங்கப்படும் உணவு(பிரியாணி) தரமானதாகவும், சுகாதாரமாகவும் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இருப்பினும் விழுப்புரத்தில் ரூ.10 பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.