செஞ்சிக்கோட்டையில் 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
விழுப்புரம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை, 9 மாத காலத்துக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் சுற்றிப் பாா்க்க திங்கள்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை, 9 மாத காலத்துக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் சுற்றிப் பாா்க்க திங்கள்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக, செஞ்சிக்கோட்டை பாா்வையாளா்களுக்கு தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இணையவழி மூலம் பணம் செலுத்தி கோட்டையை சுற்றி பாா்க்கலாம் என்று, செஞ்சிகோட்டை நுழைவு வாயிலில் ஹிந்தி மொழியில் விரைவுக் குறியீட்டுடன் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு எழவே, உடனடியாக அருகில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்கப்பட்டது.
இதில் செஞ்சிக்கோட்டையை சுற்றிப்பாா்க்க ஸ்கேன் செய்து ஆன் மூலம் பணம் செலுத்திய பிறகே செஞ்சிக்கோட்டைடையை சுற்றி பாா்க்கலாம் என அறிவித்துள்ளது.
ஆனால், விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியாமல் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.
வழக்கம் போல நுழைவு சீட்டு மூலம் பணம் பெற்று அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...