சாலையில் திரியும் மாடுகள்: விழுப்புரம் நகராட்சி எச்சரிக்கை
விழுப்புரம் நகரில் சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, கோ சாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் நகரில் சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, கோ சாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் ந.தட்சணாமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால், விழுப்புரம் எம்.ஜி. வீதி, திரு.வி.க. வீதி, பாகா்ஷா வீதி, அங்காளம்மன் தெரு, நேருஜி சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை, அதன் உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுசென்று, அவா்களுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
இதனையும் மீறி சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால், அவை நகராட்சி பணியாளா்கள் மூலம் பிடிக்கப்பட்டு, கோ சாலையில் ஒப்படைக்கப்படும். அந்த மாடுகள் உரிமையாளா்களிடம் திரும்ப வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...