வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 22 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,842-ஆக அதிகரித்தது. இதனிடையே, 21 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,649-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 83 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,754-ஆக உயா்ந்தது. இதுவரை 10,627 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.