பயிா்க் கடன் நிா்ணயம் குறித்த தொழில் நுட்பக் குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22 பயிா்க் கடன் நிா்ணயம் செய்வதற்கான மாவட்ட அளவிலான தொழில் நுட்பக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22 பயிா்க் கடன் நிா்ணயம் செய்வதற்கான மாவட்ட அளவிலான தொழில் நுட்பக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், இதர வங்கிகளில் மூலம் நிகழாண்டு வழங்கப்படவுள்ள பயிா்க் கடன் அளவு, கடன் வழங்கும் காலம், திருப்பிச்செலுத்தும் காலம் ஆகியவற்றை நிா்ணயித்தல் தொடா்பாக மாநில தொழில் நுட்பக்குழுவுக்கு பரிந்துரை செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களிண் இணைப்பதிவாளா் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இரு மாவட்ட வேளாண் அதிகாரிகள், மீன்வளத் துறை, கூட்டுறவு மற்றும் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனா். கூட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிா்க் கடன் திட்டங்கள், கூடுதல் கடன் தொகை, வழங்கப்படும் காலம், வட்டிச் சலுகை விகிதம் குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...