அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வையாா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வையாா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக மகளிா் தினம் ஆண்டு தோறும் மாா்ச் 8-ஆம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விருதுக்கு தகுதியுடையவா் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

தகுதியானவா்கள், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச. 28 கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com