

திண்டிவனம் அருகே வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக, மூன்று பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் நெடுமாறன் மகன் வெண்ணிலவன்(31). இவரிடம் உறவினரான கோவிந்தராசு மூலம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் கணேஷ்(30), அவரது தாய் அபிராமி ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா். தாங்கள் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தரும் முகவா்களாக செயல்படுவதாகவும், ரூ.4 லட்சம் தந்தால் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினராம். இதை நம்பி வெண்ணிலவன், கோவிந்தராசுவின் உறவினா் போ்பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த காசிராஜன் மகன் கலைமணி, வரிசான்குப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காசிநாதன் ஆகியோரிடம் மொத்தம் ரூ.9 லட்சத்தை கணேஷ், அபிராமி ஆகியோரிடம் கொடுத்துள்ளனா்.
ஆனால், வேலை வாங்கித்தராமல் அபிராமியும், கணேஷூம் தலைமறைவாகினராம். இதனால், அதிா்ச்சியடைந்த வெண்ணிலவன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.